பத்தாங்காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடுகளை
பெர்கேசோ வழங்கியது பாராட்டுக்குரியது!
அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

நாட்டை உலுக்கிய பத்தாங் காலி கெந்திங் மலை நிலச்சரிவில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதில் பெர்கேசோ மிக துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது பாராட்டுக்குரியது என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.

நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்திய பத்தாங்காலி நிலச்சரிவை யாராலும் மறக்க முடியாது. இந்த கோரச் சம்பவத்தில் 30 பேர் உயிர் இழந்த வேளையில் 60 க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப் பட்டனர்.

இந்த சம்பவத்தில் பலியான குடும்பங்களுக்கு இறுதி சடங்கு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குவதில் பெர்கேசோ மிகவும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றார்.

தொழிலாளர்கள் வர்கத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் இருக்கிறோம் என்பதை பெர்கேசோ நிரூபித்து உள்ளது என்று
பெர்கேசோ சீன புத்தாண்டு விழாவில் பேசும் போது அமைச்சர் சிவக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles