
தேசிய கல்வி ஆலோசனை மன்றம் அமைக்கப்பட்டது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அமைக்கப்பட்ட இந்த ஆலோசனை மன்றம் கல்வி அமைச்சருக்கு தகுந்த ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி நாட்டின் உலவும் கல்விப் பிச்சனைகளுக்கு சரியான முடிவெடுக்க அமைச்சருக்கு உதவும் என்று நம்புகிறன்.
இந்த ஒற்றுமை அமைச்சு பல கடும் போராட்டங்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து , அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி , நாட்டின் நலம் கருதி பிரதமர் அன்வாரின் தலைமையில் அமைந்த ஒன்று .
இந்த சூழலில் கல்விக்கொள்கையில் மாற்றம் என்பது ஆவசியமான ஒன்று என்ற அடிப்படையில் இந்த கல்வி ஆலோசனை மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 528 தமிழ்ப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 80 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள கல்வி பயில்கின்றார்கள்.
தமிழ் பள்ளிகள் என்று வரும் பொழுது அதில் தமிழ்ப்பள்ளிகள் குறித்த ஆழ்ந்த ஆளுமை உடைய ஒரு மலேசிய இந்தியர் இடம்பெற வேண்டுமென்பது இன்றியமையாதது.
பிரதமர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம் பிரதமரானல் எந்த ஒரு சிறுபான்மையினரும் ஒதுக்கி வைக்கப்படமாட்டார்கள, குறிப்பாக இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு சரியான கவனம் செலுத்தப்படும் என்று பலமுறை பேசியிருக்கிறார்.
இந்திய சமுதாயத்தில் ஒன்ற கலந்து விட்ட தமிழ்ப்பள்ளிகள் பிரச்சனைகளைக் களைய இந்த தேசிய கல்விக்கொள்கை ஆலோசனை மன்றத்தில் இந்தியர் ஒருவர் கூட இல்லாதது பிரதமர் கொடுத்த வாக்குறுதியை அவமதிப்பது போலாக உள்ளது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் சாடியுள்ளார்
கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் ஏன் சரியான ஒரு இந்தியரின் பிரதிநிதித்துவத்தை இந்த குழுவில் இடம் பெறச் செய்யவில்லை என்பதே என் கேள்வி என்றார் அவர்.

