
மலாக்கா மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
அந்த வகையில் Pemborong RAO Sdn.Bhd நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி எஸ்.ஏ.கிருஷ்ணா ராவ் அவர்களுக்கு டத்தோ எனும் உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ஒரு வர்த்தக தொழில் அதிபரான நாட்டில் உள்ள பல ஆலயங்களுக்கும்
தமிழ்ப்பள்ளிகளுக்கும் அதிக அளவில் உதவிக்கரம் நீட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது இயக்கங்கள், நற்பணி இயக்கங்கள் வளர்சிக்கு வாரி வழங்கிய வள்ளலாக விளங்கும் இவர் இளைஞர்கள் வியாபாரத் துறையில் வெற்றி நடை போட பெரும் அளவில் உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

