



ஷா ஆலம் ஆக 26-
நாட்டில் புகழ்பெற்ற ஷா ஆலம் புக்கிட் கெமுனிங் மகா காளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், டத்தோ டி.மோகன், டத்தோ முத்தழகன், டத்தோ பாலு, காரசாரம் உணவக உரிமையாளர் ஸ்ரீதரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கோவில் திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த ஆண்டு கோவில் நிர்வாகத்தின் சார்பாக தமிழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டத்தோ கணேசன் அன்பளிப்பு வழங்கினார்.
பிரமாண்டமான முறையில் நடைபெற்ற கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியை கவிமாறன் வழி நடத்தினார்.
கோவில் தலைவர் ஆறுமுகம், அவரின் சகோதரர்கள் டத்தோ ஜோ சரவணன்,டத்தோ கணேசன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

