


கெந்திங், ஆக 26-
நாட்டில் புகழ்பெற்ற மை எஃப்.சி. யாங் ஸ்டார் கால்பந்து கிளப் ஏற்பாட்டில் 14 ஆவது ஆண்டாக நடைபெற்ற டத்தோஸ்ரீ சாரா கிண்ண கால்பந்து போட்டியில் ஈப்போ டிரிம் குழு ஆறுமுகம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
கடந்த சனிக்கிழமை Stadium SKY Avenue Genting திடலில் மிகப்பெரிய அளவில் இந்த போட்டி நடைபெற்றது.


JK Builders and Engering SDN BHD நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ சாரா பெயரில் நடத்தப்பட்ட டத்தோஸ்ரீ சாரா கிண்ணப் போட்டியில் 24 குழுக்கள் கலந்து கொண்டன.
காலை முதல் இரவு வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஈப்போ டிரிம் குழு சாம்பியன் திட்டத்தையும் 8,000 வெள்ளி ரொக்கப் தையும் தட்டிச் சென்றது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த வைஷ்ணவி குழுவுக்கு 6,000 வெள்ளியும் மூன்றாவது இடத்தை பிடித்த டிவைன் எப்சி (சிலாங்கூர் )குழுவுக்கு 3,000 வெள்ளியும் 4 ஆவது இடத்தை பிடித்த ஹோர்னட் குழுவுக்கு 1,500 வெள்ளியும் வழங்கப்பட்டது .

கடந்த காலங்களை விட இம்முறை கெந்திங் திடலில் நடைபெற்ற போட்டி குழுக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்று மைஎப்சி யாங் ஸ்டார் கிளப் தலைவர் மணி தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் போட்டி சிறப்பாக நடைபெற டத்தோஸ்ரீ சாரா வழங்கி வரும் ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.
அடுத்த ஆண்டும் இந்த போட்டி மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் வேளையில் போட்டி வெற்றி பெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மணி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

