பேராக் DAP விருந்து விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது!

ஈப்போ, ஆக 26-
பேராக் , மாநில ஜனநாயக செயல் கட்சி (DAP) ஆண்டு விருந்து விழா இரு தினங்களுக்கு முன்பு ICC மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

சுமார் 230 மேஜைகளில் 2,300-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பங்கேற்று, விழாவை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாற்றினர்.

விழாவில் கட்சியின் தேசிய செயலாளர் YB அந்தோனி லோக், பேராக் மாநில தலைவர் ஙா கோர் மிங், துணை தலைவர் சிவகுமார், ஜசெக தேசிய அமைப்பாளர் YB வோங் கா வோ உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் தமிழ் மொழியில் உரையாற்றினார்.

மடானி அரசாங்கம் இந்திய சமூகத்திற்காக எதையும் செய்யவில்லை” என்ற குற்றச்சாட்டைத் தெளிவான உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் மூலம் மறுத்து விளக்கினார் .

கட்சி தலைவர்கள் அடிமட்ட ஆதரவாளர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியதில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

விழாவில் ஆதரவாளர்கள் அளித்த உற்சாகம், பேராக் DAP-க்கு மக்களின் நிலையான நம்பிக்கை மற்றும் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

இது எங்கள் எதிர்காலப் பயணத்திற்கு புதிய உற்சாகத்தையும் வலிமையையும் தருகிறது.

இந்த நிகழ்வை சிறப்பாக, முறையாக, ஒழுங்காக நடத்த உழைத்த ஏற்பாடு குழுவினருக்கும், தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கும் அனைத்து மக்களுக்கும் எங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

பேராக் DAP, மக்களின் ஆதரவுடன் இன்னும் வலிமையாக முன்னேறி, சிறந்த எதிர்காலத்திற்காக தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன், கோலகங்சார் கவுன்சிலர் கோபி இராமசாமி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles