
கோலாலம்பூர் ஆக 28-
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 62ஆம் ஆண்டுக் கூட்டம், விருதளிப்பு நிகழ்வுடன் விழாவும் பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் முன்னிலையில் 7.9.2025 காலை 9.30 மணி அளவில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள விஸ்மா கே.கே.பி.யில் நடைபெற்றது.
காலையில் தொடங்கும் விருதளிப்பு விழாவில், வழக்கம் போல மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் சங்கத்தின் செயல் திட்டங்களுக்கும் பங்களிப்பும் செய்துள்ள நான்கு எழுத்தாளர்கள், தங்கப்பதக்கம் அணிவித்து சிறப்பு செய்யப்படுவார்கள்.
பொன் கோகிலம்
இந்தாண்டு ‘முத்தமிழ் வித்தகர் முருகு.சுப்ரமணியன்’ விருதும்
கிள்ளான் நடராஜன் ஆதிமூலம் ‘செந்தமிழ்ச் செல்வர் சி.வி. குப்புசாமி’ விருதும்
‘சமூகக் கலை மாமணி அன்பானந்தன்’ விருதை ஆசிரியை திருமதி நிர்மலாதேவி பன்னீர்செல்வமும் பெறவிருக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ‘இலக்கியச் செம்மல் முனைவர் ரெ.கார்த்திகேசு’ விருது சரண் சுக்லாம் ஆத்மலிங்கம்@ விண்ணமுதன் ஆத்மலிங்கம் பெறவிரூக்கிறார்.

