

தித்திக்கும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு சார்பில் நேற்று ரவாங் தாமான் முஹிபா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மாபெரும் அளவில் தைப்பொங்கல் பண்பாட்டுக் கலை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
ரவாங் தாமான் முஹிபா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தலைவரும் கிராமத் தலைவருமான டத்தோ சுரேஷ் ராவ், கவுன்சிலர் மாரியம்மா இந்த தைப்பொங்கல் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
செலாயாங் கவுன்சிலர் ஏண்டி, உலு சிலாங்கூர் கவுன்சிலர் ப. புவனேஸ்வரன், கலைவாணி, கிள்ளான் கவுன்சிலர் யூவராஜா, சுபாங் ஜெயா கவுன்சிலர் ராயுடு, கிராமத் தலைவர் பாலச்சந்தர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மத்தியில் ரவாங் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் படைப்புகளும் இதில் இடம் பெற்றன

