கூட்டுறவுக் கழகங்கள் சிறப்பாக பணியாற்ற மலேசிய கூட்டுறவு ஆணையம் துணை நிற்கும்!

கூட்டுறவுக் கழகங்களின் விவேகமான திட்டமிடல், சிறந்த நிர்வாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமேயானால் சிறப்பான எதிர்க்காலத்தை அடைய முடியும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவு கழகங்களுக்கு பக்க பலமாக இருக்கும்.

தாப்பாவில் நடைப்பெற்ற கூட்டுறவு கழகங்களுக்கு மாதிரி காசோலைகள் வழங்கும் நிகழ்வில் அவர் கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பேரா மாநிலத்தை சேர்ந்த பல கூட்டுறவு கழகங்கள் கலந்து கொண்டன. குறிப்பாக பேராக் மாநில தமிழ் பள்ளிகளின் கூட்டுறவு கழகத்திற்கு மூன்று லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles