

தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பிய நபர்களுக்கு எதிராக மனித வள அமைச்சர் வி சிவகுமார், அவரின் அரசியல் செயலாளர் ரவிந்திரன், சிறப்பு அதிகாரி சுகுமாரன் ஆகியோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
Hrdf தலைமை செயல் அதிகாரி டத்தோ சாகுல் ஹமிட் இன்னும் அந்த பதவியில் நீடிக்கிறார்.
இவரை இந்த பதவியில் இருந்து நீக்காமல் அவரிடம் இவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன.
இந்த அவதூறுகளை பரப்பியவர்களுக்கு எதிராக போலீசார் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மனித வள அமைச்சர் வி சிவகுமார் தனது பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகிறார்.
குறிப்பாக இந்திய தொழில் துறைகள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண போராடி கொண்டிருக்கிறார்.
இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்திய நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைக்க திட்டம் வகுத்துள்ளார்.
மேலும் தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் ஓர் தமிழர் இடம் பெறுவதற்கு வகையில் கல்வி அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.
இவரின் சிறப்பான பணியை தாங்கி கொள்ள முடியாதவர்கள் இப்போது கீழ்த்தரமான நடவடிக்கையில் இறங்கி இருப்பது அம்பலமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா அரசியல் வானில் ஒரு கண்ணியமிக்க அரசியல்வாதியாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் விளங்குகிறார்.
எப்போது நியாயத்தின் பக்கம் இருந்து போராடும் ஆற்றல்மிக்க சிவகுமார் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இந்த அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன.
இந்த அவதூறுகளை கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்
அந்த வகையில் அமைச்சர் வி சிவகுமார் இந்த சவால்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி சிறந்த முறையில் சேவையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு மலேசியர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.

