
இந்நாட்டில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை கெராக்கான் கட்சி இழந்து விட்டதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சாடியுள்ளார்.
மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு பெரிக்கத்தான் நேஷனலால் சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை கெராக்கான் நம்ப வைக்க முடிந்தால், அது நிச்சயமாக உலகின் புதிய அதிசயங்களில் ஒன்றாக இருக்கும்.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு எதிரானது அல்ல என்று கெராக்கான் கட்சி தலைவர் டத்தோ டோமினிக் லோவ் கூறியுள்ளார்.
ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த டாக்டர் இராமசாமி, கெராக்கானின் இந்த வாக்குறுதிகளை ஒருபோதும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.

