நோயாளிகள் அதிகம் நேரம் காத்திருப்பதை தவிர்க்க குறுகிய கால வார்டுகள்- சுகாதார அமைச்சு அறிமுகம்

அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின்
நெரிசலைக் குறைக்க போதுமான இட வசதி உள்ள மருத்துவமனைகளில்
குறுகிய கால வார்டுகளை ஏற்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா இன்று தெரிவித்தார்.

இந்த திட்டம் சில மருத்துவமனைகளில் தற்போது அமல்படுத்தப்பட்டு
வருகிறது.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் குறிப்பாக மஞ்சள் மண்டலத்தில்
நோயாளிகள் அதிகம் நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக இந்த
குறுகிய கால வார்டு முறையை அமல் செய்வது குறித்து
பரிசீலிக்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் உள்ள கட்டில்களின் பயன்பாட்டைக்
கண்காணிப்பதற்கு ஏதுவாக நோயாளிகளுக்கான கட்டில் மேலாண்மை
முறை சீரமைக்கப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles