

தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் மேம்பாடுகள் குறித்து கருத்துகளை வெளிப்படுத்த எங்களுக்கு தமிழர்தான் வேண்டும் தவிர இந்தியர் அல்ல என்று மலேசிய தமிழர் சங்கத்தின் தேசிய தலைவர் வழக்கறிஞர் எம். ஜே. கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் ஓர் தமிழர் இடம் பெறாமல் போனது சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெறுவதற்கு இந்தியர்கள் முக்கிய பங்காற்றினார்.
இன்று நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் முதலில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இந்நாட்டில் 528 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இதில் மாணவர்கள் குறைவால் 130க்கும் மேற்பட்ட பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இந்தியர்கள் அதிகம் குடியிருக்கும் இடங்களில் இந்த பள்ளிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுப்பட வேண்டும்.
மேலும் தமிழ்ப் பள்ளிகளில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழ்ப் பள்ளியில் படித்த தமிழ் முனைவர் தேவை என்பதை கல்வி அமைச்சு முதலில் உணர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகவே சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்திற்கு கல்வி அமைச்சு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பிரபல வழக்கறிஞருமான எம்.ஜே. கணேசன் கேட்டுக் கொண்டார்.

