
நாட்டில் அனைத்து இனங்கள் மத்தியில் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க மனித வள அமைச்சு இலக்கு வைத்திருக்கிறது என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
மனித வள அமைச்சினால் நடத்தப்படும் tvet எனப்படும் தொழில் திறன் பயிற்சிகள் மூலம் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உருவாக்கப்படுவார்கள்.
இதன் வழி நாட்டிற்கு திறன் வாய்ந்த தொழிலாளர்கள் பல துறைகளில் இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

