உமாராணி குழுமத்தின் ஸ்ரீமகா முனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் செப் 6-.
தலைநகர் ஜாலான் ஈப்போ 4ஆவது மைல் உமாராணி குழுமத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்திர திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

உமாராணி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கலந்து சிறப்பித்தார்.

விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ சைமன் ராஜா, ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, இளைஞர் அணி தலைவர் அர்விந்த், ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட், லெம்பா பந்தாய் ம இகா தலைவர் கணேஷ், மலூரி டேவிட், செராஸ் நலேந்திரன், செனட்டர் டத்தோ சிவராஜா, டத்தோ குணாளன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சுரேஸ், டிஎன்பி சந்திரசேகரன், புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ, விலாயா மாநில ஓட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ புலேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிற்பகலில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles