
வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு கெடா மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் தெரிவித்தார்.
ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
கெடா மாநிலத்தில் உள்ள இந்து பெருமக்கள் தைப்பூசத் தினத்தன்று தங்களது குடும்பத்தினருடன் நேர்த்தி கடன்களை நிறைவேற்ற இந்த சிறப்பு விடுமுறை வழிவகுக்கும் என்று அவர் சொன்னார்.

