தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தைப்பொங்கலை கண்ணியத்துடன் கொண்டாடி மகிழ்வோம்! அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களால் வெகு விமரிசையாக தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழர்களை அடையாளப்படுத்திக் கூடிய வகையில் கொண்டாடப்படும் தைப்பொங்கல் விழா மலேசியா திருநாட்டிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஆனால், இந்த தைப்பொங்கலை சிறுமைப்படுத்தும் மற்றும் கேவலப்படுத்தும் வகையில் சில தரப்பினர் கொண்டாடியது கண்டிக்கதக்கது.

நாம் தமது கலாச்சாரத்தையும் பாரம்பரிய பெருமைகளையும் நிலைநாட்ட வேண்டும்.

எந்த வகையிலும் தைப்பொங்கலை களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

ஆகவே மலேசியத் தமிழர்கள் எழுச்சி திருநாளாக தைப்பொங்கலை கொண்டாடி மகிழ மனதார வாழ்த்துவதாக மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்

Kelab Rekreasi Jelapang
ஏற்பாட்டில்
ஸ்ரீ மூகாம்பிகை ஜெலாபாங் தம்பாஹானில் நடைபெற்ற தைப்பொங்கல் ஒற்றுமை விழாவுக்கு மனித வள அமைச்சரும் பத்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான வ. சிவகுமார் தலைமைத் தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles