
முன்னாள் அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ தோமி தோமஸ் எழுதிய புத்தகம் தொடர்பாக பொது விசாரணை நடத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பிரபல வழக்கறிஞரும் ஆர்வலருமான அம்பிகா ஸ்ரீனிவாசன் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற விசாரணையின் ஆபத்துகளை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொது விசாரணை நடத்துவது நீதி நிர்வாகத்தை சீரழிப்பது போன்றது
இது அட்டர்னி ஜெனரலின் அலுவலகம் மீதான தாக்குதல்,” என்று அவர் சாடினார்.,
நாட்டில் எந்தவொரு அட்டர்னி ஜெனரலும் இது போன்ற தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.
பல அம்னோ தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
ஒற்றுமை அரசாங்கத்தை பாதுகாக்க அதிக விலை கொடுக்காமல் இருக்க நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

