நாட்டின் வளங்கள் கொள்ளையிடப்படுவதை நிறுத்தினால் மலேசியா மேலும் வளம் பெறும்! டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்

ஊழல் மூலம் நாட்டின் வளங்கள் கொள்ளையிடப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படும் பட்சத்தில் இந்த பிராந்தியத்தில் மேம்பாடு கண்ட நாடாக மலேசியா உருவாக வாய்ப்பு உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள், உயர் நிலையிலான அரசாங்க அதிகாரிகள் அல்லது அமலாக்கத் தரப்பினர் ஊழல் நடவடிக்கைகளை கட்டாயம் நிறுத்த வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

தங்களுக்கு உரிமை இல்லாத வளங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்காக குத்தகை அல்லது திட்டங்களைப் பெறுவதற்கும் அதற்கான வாய்ப்புகளை அடைவதற்கும் முயலும் தரப்பினர் விஷயத்தில் தாம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை.

ஊழலை எதிர்க்கும் தைரியம் கொண்ட மலேசியர்கள் இருப்பது அவசியம் என்று நேற்று
பினாங்கு முதல்வர் சாவ் கூன் இயோ ஏற்பாடு செய்திருந்த சீனப்புத்தாண்டு பொது உபரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles