
அம்பாங் ஜாலான் கோலாம் ஆயரில் உள்ள அம்பாங் இந்து மயானத்தை சுத்தப் படுத்தும் கூட்டுப் பணி வரும் ஜனவரி 29 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ஆதரவோடு காலை 9.00 மணிக்கு நடைபெறும் அம்பாங் இந்து மயானத்தை சுத்தப்படுத்தும் பணியில் சுற்று வட்டார மக்கள் மற்றும் இந்த தங்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக கலந்து கொண்டு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்து மயானம் நமது உரிமை. அந்த வகையில் அம்பாங் இந்து மயானத்தை சுத்தப்படுத்தி பாதுகாப்போம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

