
ஜொகூர் பாரு செப் 23-
எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைக்குழு சின் சியூ மற்றும் சீனார் ஹரியான் ஊடகங்களுக்கு விதித்த ரிம 100,000 அபராதம் நாட்டில் ஊடகவியலாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது.
வரும் 16வது பொதுத் தேர்தலில் எதிரொலியாக இது பிரதிபலிக்கும் என ஜொகூர் மாநில பெரிகத்தான் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் உச்சமன்ற உறுப்பினர் சந்திர சேகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த இரண்டு ஊடகங்களும் ஏற்கனவே மன்னிப்பு கேட்ட நிலையில் அரசாங்கம் சீர்திருத்த உணர்வை பிரதிபலிக்கவில்லை என அவர் கூறினார்.,
இந்த விதிமுறை ம
அரசாங்கத்திற்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலருமான சந்திர சேகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு ஊடகங்களுக்கு எதிரான இந்த அபராதம் எதிர்பார்க்கப்பட்ட கொள்கைக்கு முரண்படுவதாக அமைந்துள்ளது.
எனவே, எதிர்வரும் தேர்தலில் அந்த கூட்டணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான எச்சரிக்கை போதுமானது. அவர்கள் ஆரம்பத்திலேயே மன்னிப்பு கேட்டும் திருத்தமும் செய்துவிட்டனர்.
ஊடகங்களை குற்றம் சாட்டுவது, தன்னம்பிக்கையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருப்பதை காட்டுவதில்லை என கூலாய் தொகுதி பெரிகத்தான் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் தலைவருமான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் இன்று வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

