
2020 ஆம் ஆண்டு பெண் குழந்தையை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் முருகம்மாள் மற்றும் தாதியர் நூர் அஸ்லினா மீது இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது .
நர்ஸ் நூர் அஸ்லினா முகமட் நசீர் வயது 41, மற்றும் இல்லத்தரசி டி முருகம்மாள் வயது 52, ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நீதிபதி நோராஷிமா காலிட் முன் வாசிக்கப்பட்டபோது இருவரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
கெடாவின் அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தாதியராக இருக்கும் நூர் அஸ்லினா மற்றும் பினாங்கில் முகவரி கொண்ட முருகம்மாள் ஆகியோர் ஒன்பது நாட்களே ஆன பெண் குழந்தையை கடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் பேராக்கின் மஞ்சோங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் இவர்கள் இந்த குற்றத்தை புரிந்தனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

