
மா.பவளச்செல்வம்
ஷா ஆலம், செப் 29-
கலைகளுக்கு அதிபதியான தேவி சரஸ்வதியைக் கொண்டாடும் சரஸ்வதி பூஜை
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியின் இறுதி நாளாகும் .

அந்த வகையில் மலேசியாவில் நவராத்திரி விழாவுடன் கூடிய சரஸ்வதி பூஜையும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நேற்றிரவு Pusat Tuisyen Arena Matriks ஏற்பாட்டில் நாட்டில் புகழ்பெற்ற
புக்கிட் கெமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திலும் சரஸ்வதி பூஜை சிறப்பாக நடந்தேறியது.
புக்கிட் கெமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த சரஸ்வதி பூஜை விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Pusat Tuisyen Arena Matriks நிர்வாக இயக்குனர் ஆசிரியர் ஜனகன் இந்த விழாவில் எஸ்பிஎம் தேர்வை எழுதும் மாணவர்களுக்கும் இதர மாணவர்களுக்கும்தேர்வு வழிகாட்டி புத்தகங்களை அன்பளிப்பு செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாணவர்களின் கல்வி அறிவு திறனை மேம்படுத்த புத்தகங்களை அன்பளிப்பு செய்து வருவதாக ஜெனகன் தெரிவித்தார். இந்த விழாவில் டத்தோ கணேஷ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது