

கோலாலம்பூர், செப் 29–
பினாங்கு மாநில பெண்கள் கால்பந்து குழு கடந்த வாரம் இறுதியில் இரண்டு நட்பு முறை ஆட்டத்தில் பங்கேற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற சிலாங்கூர் சோக்கர் ஸ்கூல் அணியுடன் மோதியது.

Kompleks Sukan SUK Selangor அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பினாங்கு மாநில இந்தியர் பெண்கள் அணி 7-4 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது.
முன்னதாக சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு Shah Alam lakeside Training Center திடலில் நடைபெற்ற முதல் நட்பு முறை ஆட்டத்தில் பினாங்கு பெண்கள் குழு 1-1 என்ற கோல் கணக்கில் சிலாங்கூரை சேர்ந்த Future FA கிளப்புடன் டிரா கண்டது.

இரண்டு ஆட்டத்தில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் சமநிலையும் கண்ட பினாங்கு மாநில இந்தியர் பெண்கள் அணி சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தியதாக அதன் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.