
கிள்ளான், செப் 30-
நாடாறிந்த வழக்கறிஞர் மதியழகனின்
வழக்குகளில் என் பயணம் நூல் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 4 ஆம் தேதி கிள்ளான் தெங்கு கிளானா E-Library மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
ஷா ஆலம் தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழாவுக்கு கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தலைமை ஏற்கிறார்.
தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.