
கோலாலம்பூர் செப் 30-
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சருடன் இணைந்து மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் நடத்தும் மலேசிய இந்திய இளைஞர் மாநாடு வரும் அக்டோபர் 12 ஆம் தேதி புத்ரா ஜெயா Dewan Seri De Endon மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் நாடு தழுவிய அளவில் 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் டினேஷ் பேசில் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் மற்றும் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா தலைமை ஏற்கிறார்.
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ மற்றும் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ நகுலேந்திரன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
மலேசிய இந்திய இளைஞர்கள் தங்களது ஆற்றல் திறனை வளர்க்க இந்த மாநாடு முக்கிய தளமாக விளங்கும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.