
ஈப்போ,அக்01: குத்தகை பணியாளர்களும் தனியார் நிறுவன ஊழியர்களும் தொழிலாளர்கள் என்னும் நிலையில் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களே.
அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளும் அடிப்படை வசதிகளும் நிறைவாக வழங்கப்படவும் வேண்டும் என்றும் மனிதவ ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் குறிப்பிட்டார்.
தனியார் மற்றும் குத்தகை அடிப்படையில் பணியிலிருக்கும் தொழிலாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மதிக்கத்தக்கது.அவர்களின்னுழைப்பை நாம் மேன்மையாக கருத வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பேரா மாநில அரசு செயலகத்தில் பணியில் ஈடுப்பட்டிருக்கும் அரசு துறை சாராத பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கிய பின்னர் மாநில சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் இவ்வாறு கூறினார்.
மேலும்,அன்பளிப்பு பெற்ற சம்மதப்பட்ட தொழிலாளர்கள் தங்களின் வேலை தொடர்பில் சிக்கலை எதிர்நோக்கினான் தன்னை அணுகுமாறும் கேட்டு கொண்ட அவர் தொழிலாளர் உரிமை எந்நிலையிலும் காக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தொழிற்சங்கவாதியுமான அவர் நினைவுறுத்தினார்.
தொழிலாளர் வர்க்கத்தின் நலன் காக்கப்பட்டால் நாடும் அது சார்ந்த செழிமைகளும் நன்நிலைக்கு உயரும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காண்பித்தார்.
பேரா மாநிலச் செயலகத்தில் பணி புரியும் சுமார் 80 தூய்மை பணியாளர்களில் 17 பேர் இந்தியர் என்றும் தீபாவளித் திருநாளை அவர்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டியே தாம் இந்த அன்பளிப்புகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாகவும் சிவநேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து மூன்றாவது ஆண்டாக இந்த அன்பளிப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.