
கோலாலம்பூர்: அக் 2-
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேல் இடைமறித்தது மனித உரிமை மீறலாகும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) கப்பல்கள் ஏற்றிச் சென்றுள்ளன.
இந்த கப்பல்களை இஸ்ரேல் படைகள் இடைமறித்தது தாக்கியுள்ளன.
இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும் ஆர்வலர்களுக்கு எதிரான ஒரு வகையான மிரட்டலாகும்.
குறிப்பாக மனித உரிமை மீறல் என்று விவரித்தார்.
இக் கப்பல்கள் அத்தியாவசியப் பொருட்களையும் நிராயுதபாணியான பங்கேற்பாளர்களையும் ஏற்றிச் சென்றன.
ஆனால் இஸ்ரேலிய கடற்படையால் கடும் அச்சுறுத்தல்களை சந்தித்தது வருகின்றன.
இந்த மனிதாபிமான பணியைத் தடுப்பதன் மூலம், இஸ்ரேல் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மட்டுமல்ல உலகின் மனசாட்சியை அவமதிக்கிறது என்று பிரதமர் கூறினார்.
Bernama