தமிழ் – சீனம் – தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் AI கல்வியாளர் பயிற்சி பட்டறை!

கோலாலம்பூர் அக் 3-
உலகம் இன்று ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவில் அதி வேகமாக வளர்ந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவில் நாமும் பின் தங்கி விடாமல் இருக்க எல்லா துறைகளையும் சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்று முன்னேறி வருகின்றனர்.

அந்த வகையில் மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், சீனம் மற்றும் தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை இலவசமாக நடத்தப்படுகிறது.

நாட்டில் புகழ்பெற்ற Blues Brothers Welfare Association Malaysia ஆதரவோடு நாளை அக்டோபர் 4 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை Basic 8, Lorong 19/1a, Seksyen 19, Petaling Jaya 46300 Selangor என்ற இடத்தில் இந்த பயிற்சி பட்டறை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Arutsothy Annamalai இந்த பயிற்சி பட்டறையை வழி நடத்தும் வேளையில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதவி செய்துள்ளனர் என்று Blues Brothers Welfare Association Malaysia இளைஞர் அணி தலைவர் YBhg. Datuk Dr. M. Shankar தெரிவித்தார்.

பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் மடிக் கணினி கொண்டு வர வேண்டும். இவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை தேநீர் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் அரசு சாரா நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்கு (SJK, SJK(T), SJK(C) & SMK) ஒரு AI திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாய்ப்பை ஆசிரியர்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

வரும் அக்டோபர் 11 ஆம் தேதியும் இதே இடத்தில் இரண்டாவது பயிற்சி பட்டறை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே Blues Brothers Welfare Association Malaysia ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் இந்த பயிற்சி பட்டறை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அதன் தலைவர் Samad தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் இந்த பயிற்சி பட்டறை மாணவர்களுக்கும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles