


கோலாலம்பூர் அக் 4-
ஜாலான் புக்கிட் காசிங்கில் புகழ்பெற்ற மகாராஜா உணவக வளாகத்தில் தீபாவளி ரவி பசார் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பலவிதமான பலகாரங்கள், முறுக்கு வகைகள், பட்டுச் சேலைகள், பல ரகங்கள் கொண்ட சுடிதார்கள் இங்கு விற்கப்பட்டது.
பெண்கள் விரும்பி அணியும் அணிகலன்கள் உட்பட பல பொருட்களும் விற்கப்பட்டது.
ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் சிறப்பு வருகை தந்து இந்த தீபாவளி ரவி பசாரை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
மகாராஜு உணவகத்தின் உரிமையாளர் இளங்கோவன் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் மகேந்திரா – தானவன் ஆகியோர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்களக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.