
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 15-
மடானி அரசாங்கத்தின் தர்மா மடானி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோவில்களுக்கு தலா 20,000 வெள்ளி மானியம் வழங்கப்படுகிறது.
இந்த தர்மா மடானி மானியத்திற்கு வரும் அக்டோபர் 17 ஆம் மாலை 3.00 மணிக்கு மேல் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்ய இறுதிநாள் நவம்பர் 3 ஆம் தேதியாகும் என்று கூட்டுறவு தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இன்று அறிவித்தார்.
விண்ணப்பம் செய்யும் போது ஆலய நிர்வாகங்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கல்வி மடானி
இலவச டியூஷன் எனப்படும் பிராத்தியோக வகுப்புகளுக்கு 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
200 தமிழ்ப் பள்ளிகளில்
இந்த இலவச டியூஷன் வகுப்பு நடத்தப்படும்.
பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்த 40 பிரிவைச் சேர்ந்த 3,000 மாணவர்களுக்கு 55 லட்சம் வெள்ளி மதிப்பில் மடிக்கணினிகள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்..
நாட்டில் உள்ள 173 தமிழ்ப் பள்ளிகள் மேஜை நாற்காலிகள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு கோடியே 28 லட்சம் வெள்ளி வழங்கப்படும்.
கடும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 1,064 குடும்பங்களுக்கு 12 மாதங்களுக்கு BSN வங்கி மூலம் தலா
1750 வெள்ளி வழங்கப்படும். இதற்காக
35 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
Bantuan awal எனப்படும் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உதவ ஒரு கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
பேறு குறைந்த மாணவர்களுக்கு தலா 3,000 வெள்ளியும் இதர மாணவர்களுக்கும் தலா 2,000 வெள்ளியும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்த மாணவர்கள் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை
பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.

