
டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் ஆழமாக பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை நான் புரிந்துகொள்கிறேன். முழு நாடும் அவர்களுடன் நிற்கிறது. சம்பவம் குறித்து விசாரிக்கும் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன்.
இந்த சதித்திட்டத்தின் மூலத்தை புலனாய்வு அமைப்புகள் விரைவில் கண்டுபிடிக்கும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதன் பின்னணியில் உள்ள சதிகாரர்களைத் தப்ப விட மாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார்.

