
எம். பவளச்செல்வம்
கோலாலம்பூர் நவ 26-
இந்திய மற்றும் முஸ்லிம் உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கான சிறப்பு அனுமதி வழங்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருணை காட்ட வேண்டும் என்று டத்தோ முகமத் மோசின் கேட்டுக் கொண்டார்.
அந்நிய தொழிலாளர்கள் இல்லாமல் உணவகத் துறை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இத்தொழிலாளர்களுக்காக ஒவ்வொரு உணவக உரிமையாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்நிலையில் தான் உணவகத் துறைக்கான Gantian எனப்படும் மாற்று தொழிலாளர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக உள்ளது.
இதனால் கிடைக்கும் இதன் மூலம் கிடைக்கும் அந்நியத் தொழிலாளர்களையும் நாங்கள் இழந்து வருகிறோம். ஆக இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும்.
குறிப்பாக உணவகத் துறைக்கு அந்நியத் தொழிலாளர்களுக்கான சிறப்பு அனுமதி அரசாங்கம் வழங்க வேண்டும். இதற்கு இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட வேண்டும்.
பிரதமரால் மட்டுமே எங்களின் பிரச்சினைக்கு தீர்வை கொடுக்க முடியும்.
ஆக பிரதமர் எங்கள் மீது கருணை கொண்டு உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என பெரிஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ முகமத் மோசின் கேட்டு கொண்டார்.

