

ஈப்போ, நவ 26-
இங்குள்ள ஈப்போ அரங்கில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் பெல்ஜியம் அணி 3ஆவது வெற்றியை பதிவு செய்தது.
இன்று மாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் 6-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. புகழ்பெற்ற ஆட்டக்காரர் டாம் பூன் மற்றும் ஹென்ட்ரிக்ஸின் கோல்கள் கொரியாவைத் தடுமாறச் செய்தன.
ன்றைய ஆட்டத்தில் பெல்ஜியம் தென் கொரியாவை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால், ஆண்டின் சிறந்த உலக வீரர் டாம் பூன் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
அலெக்சாண்டர் ஹென்ட்ரிக்ஸ் இரட்டை கோல் அடித்தார். போட்டியில் முதல் முறையாக, பெல்ஜியம் பயிற்சியாளர் ஷேன் மெக்லியோட் போட்டியின் ஐந்து நிமிடங்களில் டான் பூனை களம் இறங்கினர்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு டான் பூனை 2025 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறிய 36 வயதான டான் பூன், பெல்ஜியத்தின் தேசிய அணிக்காக 315 கோல்களையும், உள்நாட்டு லீக்கில் 700 க்கும் மேற்பட்ட கோல்களையும் அடித்துள்ளார்.
பெல்ஜியம் தனது முதல் ஆட்டத்தில் கனடாவுடன் 1-1 என்று டிரா கண்டது.பின்னர் இரண்டாம் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இன்று 6-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
தொடக்க ஆட்டத்தில் மலேசியாவுடன் 2-2 டிரா கண்ட நியூசிலாந்து பின்னர் 3-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி தற்போது 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது

