
ஈப்போ நவ 26-
பேராக் மாநிலத்தில் ஈப்போ அரங்கில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
7 ஆவது நிமிடத்தில் இந்தியாவின் முதல் கோலை செல்வம் கார்த்திக் அடித்தார்.
பதிலுக்கு 13 ஆவது நிமிடத்தில் மலேசியாவின் கோலை ஸாரி பைசால் அடித்தார்.
21 ஆவது நிமிடத்தில் இந்தியாவின் இரண்டாவது கோலை சுஜிட் சிங் அடித்த வேளையில் மலேசியாவின் இரண்டாவது கோலை 36 ஆவது நிமிடத்தில் மீண்டும் ஸாரி பைசால் அடித்தார்.
பிற்பகுதியில் இந்தியாவின் 3 ஆவது கோலை 39 ஆவது நிமிடத்தில் ரோஹிடாஸ் அடித்தார். பதிலுக்கு 45 ஆவது நிமிடத்தில் மலேசியாவின் 3 ஆவது கோலை ஜாலில் அடித்தார்.
இருப்பினும் 54 ஆவது நிமிடத்தில் இந்தியாவின் 4 ஆவது கோலை சஞ்சேய் அடித்து வெற்றியை பதிவு செய்தார்.
3 ஆட்டங்கள் முடிவில் இந்திய 6 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது. மலேசிய 4 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.
பெல்ஜியம் மற்றும் நியூசிலாந்து தலா 7 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளது.

