முதல் கட்டமாக 104 தமிழ்ப் பள்ளிகளுக்கு Smart Board அன்பளிப்பு!

கோலாலம்பூர் டிச 9-
நாட்டில் இன்று முதல் கட்டமாக 104 தமிழ்ப் பள்ளிகளுக்கு Smart Board எனப்படும் திறன் பலகை வழங்கப் பட்டது.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் பட்லினா சீடேக், துணை கல்வி அமைச்சர் வோங் கா வா மற்றும்
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கல்வியின் மாற்றத்தை இனியும் தாமதப்படுத்த முடியாது என்றும், டிஜிட்டல் கல்வியறிவு, படைப்பாற்றல் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த தலைமுறையை உருவாக்க தமிழ்ப் பள்ளிகள் சிறந்த வசதிகளுக்குத் தகுதியானவை என்று கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் தனது உரையில் வலியுறுத்தினார்.

SJKT மாணவர்களிடையே தாய்மொழிப் பள்ளிகளை மேம்படுத்துதல், பஹாசா மலாய், ஆங்கிலம் மற்றும் டிஜிட்டல் புலமையை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் மலேசிய கல்வி அமைச்சின் மகத்தான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இந்த திறன் பலகை ஓப்படைக்கப் பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த திறன் பலகை தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நலனில் மடானி அரசாங்கம் அக்கறை செலுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று.

ஆகவே அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles