ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழாகளில் உள்ளூர் குருக்கள்களுக்கு முன்னுரிமை அவசியம்

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் அவர்கள், பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ. சிவனேசன் அவர்கள் வெளியிட்ட கருத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கிறார்.

ஆலய கும்பாபிஷேகங்கள் மற்றும் முக்கிய கிரியைகளுக்கு, உள்ளூர் குருக்கள்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது மிகவும் தேவையானது.

உள்ளூர் குருக்கள்களுக்கு பல ஆண்டுகளாக தங்கள் ஆன்மிக பயிற்சி, பாரம்பரியம் மற்றும் ஆகம அறிவை வளர்த்துக் கொண்டு இருந்தும், அவர்களுக்கு ஆலயங்களில் முக்கிய பங்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு.

அதன் காரணமாக, பல குருக்கள் மற்ற பணி துறைகளில் வேலை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க சூழல்.

அதே வேளையில், மலேசியாவில் பல்வேறு ஆலயங்களில் பணியாற்றும் திறமையான, தகுதியான சிவாசாரியார்கள் உள்ளனர்.

ஆனால் வைணவ ஆலயங்களுக்கு வரும்போது, தேவையான நிபுணத்துவத்தில் குறைபாடு உள்ளது. இது எதிர்காலத்தில் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சினை.

எனவே, உள்ளூர் குருக்கள்களுக்கு கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் மற்றும் தினசரி பூஜைகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆலயங்கள், குருக்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் மேடை ஆக வேண்டும்.

குருக்கள் ஓரு துறையில் மட்டும் அல்லாமல் – சைவம், வைணவம், ஆகமம், யாகங்கள் போன்ற அனைத்துத் துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம், குருக்கள் வாழ்க்கைத் தரமும் வருமானமும் மேம்படும்.

மலேசிய இந்து சங்கம் தேர்ச்சி பெற்ற குருக்கள் உருவாக்குவதில் தொடர்ந்து மலேசிய குருக்கள் சங்கம் மற்றும் மலேசிய அர்ச்சகர் சங்கத்துடன் செயல்படுகிறது.

இளம் தலைமுறையை பயிற்சி கொடுத்து, ஆலய மரபையும் ஆகம விதிகளையும் காப்பதில் முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உள்ளூர் குருக்கள் உயர வேண்டும் என்றால், நாம் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் AMN.,ASA
தலைவர்
மலேசிய இந்து சங்கம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles