

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு தாய்க் கோயில் என்று வர்ணிக்கப்படும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளி ரதம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பத்துமலை திருத்தலத்தை நோக்கி புறப்பட்டது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் பத்துமலை நோக்கி புறப்பட்டார்.
வெள்ளி ரத்தத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னும் பின்னும் நடந்து சென்ற வேளையில் வழி நெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு சுவையான பானங்கள் மற்றும் உணவுகளை வழங்கி உபசரித்தனர்.
மனித வள அமைச்சர் வ. சிவகுமார் வெள்ளி ரத ஊர்வலத்தில் கலந்து சிறப்பித்தார்

