
பூலாய், டிச 21-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த
கங்கார் பூலாய் முருகன் கோவிலை கூலாய் நகராண்மைக் கழகம் உடைத்துள்ளது.
ஆனால், கூலாய் நகராண்மைக் மன்ற உறுப்பினர்கள் இதற்கு அனுமதி தரவில்லை மற்றும் தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறது.
இந்த பல கேள்விகளை எழுப்புகிறது, குறிப்பாக இது 4×4 அளவிலான ஒரு சிறிய கோவில் மட்டுமல்ல. கங்கார் பூலாயில் முக்கியமான ஒரு வழிபாட்டு தலமாக இது உள்ளது.
அந்த கோவிலுக்காக நிலம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ள கோவில் தலைவர் அவர்களின் வேண்டுகோளின்
படி, முதலமைச்சரும் ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின் அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவிலுக்கான புதிய நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று
மலேசிய வேலன் படைத் தலைவர் சுரேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

