சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த வேளையில் அதை சீர்குலைக்கும் வகையில் பாஜ ஆளும் பல மாநிலங்களில் தேவாலயங்கள் மீதும் கிறிஸ்தவ மக்கள் மீதும் இந்து அமைப்பு மதவாத கும்பல்கள் தாக்குதல்களை நடத்தின.

ம.பி, ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநிலங்களில் இச் சம்பவங்கள் அரங்கேறின. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர்-ராய்ப்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles