

மேதகு எனும் ஈழ வரலாற்று திரைப்படத்தை இயக்கிய, தமிழ்த் தேசிய இயக்குனர் தீ.கிட்டுவின் அடுத்த படைப்பான ஈழ போராட்டத்தின் இணையற்ற ஈக வரலாற்றுப் பறைசாற்றும் “சல்லியர்கள்” எனும் திரைப்படத்தை தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் திரையிட மறுத்ததை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வன்மையாக கண்டிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு திரைத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழர் அல்லாதவர்கள் திட்டமிட்டு தமிழ், தமிழர், தமிழர் வரலாறு சார்ந்த படைப்புகளை புறக்கணிப்பதையும் அதேபோல அவ்வரசும் தமிழ், தமிழர் அடையாளங்களை மெல்ல மெல்ல அழிப்பதையும் உலகத் தமிழர்கள் கவனித்துக் கொண்டே தான் வருகிறார்கள்.
அண்மையில் இத்திரைப்பட இயக்குனர் தீ.கிட்டு மற்றும் தயாரிப்பாளர் சுரேசு காமாட்சி ஆகியோர் திரையரங்கு கிடைக்காத வேதனையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததை கண்டு மனம் வேதனை அடைந்தோம். தமிழருக்கு எதிரான சிக்கல், தமிழ் படைப்புகளுக்கு எதிரான தடை என அதிகார வர்க்கத்தால் திட்டமிட்டு நிகழ்த்தி வருவோரை தமிழக தமிழர்கள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
ஈழப் போராட்ட யுத்தத்தில் மருத்துவப் பிரிவு போராளிகளின் உன்னதத்தை உலகுக்கு காட்டும் மாபெரும் வரலாற்றுப் படைப்பான “சல்லியர்கள்” எனும் திரைப்படத்தை தற்போது (OTT Plus) என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இது வெரும் படம் அல்ல, ஈழ வரலாற்று பாடம் என்பதை உணர்ந்து உலக தமிழர்கள் கண்டு வரவேற்று பேராதரவு தந்து வெற்றியடை செய்ய வேண்டுமாய் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் சார்பில் திரு.பாலமுருகன் வீராசாமி கேட்டுக்கொண்டார்.

