

காஜாங், ஜன 3- நேற்று மாலையில் காஜாங், பண்டார் டெக்னாலஜி பகுதியில் வசித்து வரும் வி. கிருஷ்ணசாமி மற்றும் திருமதி எஸ். பொன்மலர் (கணவன்–மனைவி) அவர்களை நாங்கள் சந்தித்தோம்.
வி. கிருஷ்ணசாமி அவர்கள் ஸ்ட்ரோக் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர். அவரது மனைவி பொன்மலர் நீரிழிவு நோயின் காரணமாக காலிழப்பு (leg amputation) செய்துள்ளார்.
இருவரும் தற்போது கடுமையான உடல்நலம் மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சந்திப்பின் போது, NGO–NGO India Kajang அமைப்பின் சார்பில் அவர்களின் உடனடி தேவைகளுக்காக நிதியுதவி வழங்கப்பட்டதாக அதன் தலைவர் குமார் தெரிவித்தார். இக்குடும்பத்திற்கு தொடர்ந்து பொருளாதார உதவி தேவைப்படுகிறது.
தற்போது அரசு நலத்திட்ட உதவி (Kebajikan) பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறையில் அவர்கள் உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் அவர்களை நேரில் சந்திக்கலாம்:
முகவரி:
J3-12, Jalan 5/6,
Seksyen 5, Bandar Teknologi Kajang,
43000 Semenyih, Kajang
தொடர்பு எண்: 019-297 5269

