அரசியல் ஆதாயத்திற்காக இனம் – மதத்தை அக்மால் பயன் படுத்துகிறார்! டாக்டர் சத்யா பிரகாஷ் சாடல்

கோலாலம்பூர் ஜன 6-
தனது அரசியல் ஆதாயத்திற்காக மத, இனத்தை அம்னோ இளைஞர் தலைவர் அக்மால் சாலே பயன்படுத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று
சிலாங்கூர் கெஅடிலான் தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் சாடினார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அம்னோ சமீபத்தில் விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

நாடு துரோகம் செய்யப்பட்டதாக சித்தரிக்க முயற்சிக்கும் கதை அடிப்படையற்ற, பொறுப்பற்ற அரசியலின் ஒரு வடிவமாகும்.

இதுபோன்ற அறிக்கைகள் உணர்ச்சிவசப்படுவது மட்டுமல்லாமல், நல்லிணக்கத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இதுபோன்ற பேச்சுக்கள் எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் என்பதை உணராமல் அவர் அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறார்

தனது அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே இவர் இந்த பிரச்சினையையும் தெளிவாகப் பயன்படுத்துகிறார்.

மதத்தை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தும் செயல் சமூகத்தைப் பிளவுபடுத்துமே ஒழிய மக்களை ஒன்றிணைக்காது என்று அவர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles