தமிழ்ச் சமூகத்திற்கு பொங்கல் வாழ்த்துகள்- மாண்புமிகு ஆர்.யுனேஸ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன16- தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ் சமூகத்திற்கும் இத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணையமைச்சர் மாண்புமிகு ஆர்.யுனேஸ்வரன் வாழ்த்து தெரிவித்தார்.

பொங்கல் என்பது இயற்கையின் அருளுக்கும், இறைவனின் ஆசீர்வாதத்திற்கும் நன்றி செலுத்தும் ஒரு விழாவாகும். குறிப்பாக, விவசாயிகளின் கடின உழைப்பையும், குடும்பம் மற்றும் நாட்டின் செழிப்பிற்கு அடிப்படையாக விளங்கும் உழைப்பின் மதிப்பையும் போற்றும் வகையில் இவ்விழா அமைகிறது.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையோடு, சுத்தமான மனதுடனும், நேர்மறையான சிந்தனையுடனும்,

ஒருவரையொருவர் மதிக்கும் உறுதியுடனும் இந்தப் புத்தாண்டைத் தொடங்குமாறு ஆர். யுனேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பொங்கல் திருநாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அபரிமிதமான செல்வம், மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் துணையமைச்சர் வாழ்த்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles