
ஷா ஆலம், ஜன 16: இந்த ஆண்டுக்கான குடியிருப்பாளர் சங்கங்கள், பள்ளிகள், இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளங்களுக்கான நிதி உதவிக்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவிக்கான விண்ணப்ப காலம் 2026 ஜனவரி 13 முதல் ஜனவரி 30 வரை ஆகும். கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், காலாவதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாக (ஹார்ட்காப்பி) கோத்தா கெமுனிங் அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

