

பந்திங், ஜன 27-
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் சார்பில் தைப்பொங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுக் பங்லீமா காராங்கில் விமரிசையாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் மற்றும் கோலலங்காட் பிபிபி தொகுதி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், பொருளாளர் டத்தோஸ்ரீ டல்ஜிட் சிங், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, தகவல் தொடர்பு துறை துணை தலைவர் குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

டத்தோ டாக்டர் லோகபாலா பொங்கல் பானையில் பால் ஊற்றி பொங்கல் வைத்தார்.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகளை தட்டி சென்றனர்.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் சார்பில் மூத்த குடிமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

