

கோலாலம்பூர் பிப் 6-
தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு கடந்த வாரம் தைப்பூசம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கோலாலம்பூர் தாய்க் கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளி ரதம் புறப்பட்டு பத்துமலை திருத்தலத்திற்கு வந்த போது வழி நெடுகிலும் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர் பானங்களும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இளம் வர்த்தக பிரமுகர் திரு அவர்கள் தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு அன்னதானமும் குளிர் பானங்களையும் வழங்கி பேருதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன் அவர்கள் தண்ணீர் பந்தலுக்கு வருகை தந்து குளிர்பானத்தை அருந்தி திருவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

