
கோலாலம்பூர் பிப் 7-
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு பண்டார் துன் ரசாக் பிபிஆர் குடியிருப்பில் இன்று தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற சேவை மையம் மற்றும் சிலாங்கூர் – கூட்டரசு பிரதேச மக்கள் மறுமலர்ச்சி சமூக நல இயக்கம் இணைந்து இந்த தைப்பொங்கல் விழாவை ஏற்பாடு செய்தது.

பண்டார் துன் ரசாக் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் ஜோனதன் பிரின்ஸ் வேலா, Mahathir Mohamad
Pengerusi, MPP Sub Zone 5 மற்றும் விழா ஏற்பாட்டாளர் திருமதி லெட்சுமி உட்பட பலரும் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.
காலையில் மகளிர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
இதில் மலாய் பெண்களும் பொங்கல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு பண்டார் துன் ரசாக் பிபிஆர் குடியிருப்பில் தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற்ற விழாவும் சிறப்பாக நடைபெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஜோனதன் வேலா தெரிவித்தார்

