புக்கிட் மெலாவத்தி தொகுதியில் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், பிப் 24: எதிர்வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு, பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க புக்கிட் மெலாவத்தி சமூக சேவை மையம் அதன் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வவுச்சர்கள் SMUE அல்லது SMIS திட்ட உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும், மாதாந்திர குடும்ப வருமானம் RM3,000-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கும், ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கொண்டாடுபவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் புக்கிட் மெலாவத்தி தொகுதி வாக்காளர்களாக இருக்க வேண்டும்.

“ஒரு குடும்பத்திற்கு ஒரு வவுச்சர் என்ற அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படும்.

இந்த திட்டம், பண்டிகைக் காலங்களில் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது குறைந்த வருமானம் பெறும் மக்களின் சுமையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைச் சமூக சேவை மையத்தில் பெற்று கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் தங்களின் கிராமத் தலைவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles