
கோலாலம்பூர் மார்ச் 12-
கோலாலம்பூரில் பாரம்பரியமிக்க பள்ளிவாசல்களில் ஒன்றான கம்போங் பாண்டான் பள்ளிவாசலில் நேற்று நோன்பு துறப்பு நிகழ்ச்சி சமூக ஆர்வலர்- தமிழ்ப்பற்றாளர் டத்தோ வீரா ஷாகுல் தலைமையில் நடைபெற்றது.
நோன்பு மாதம் தொடங்கியதிலிருந்து தினந்தோறும் ஆயிரம் பேருக்கு நோன்பு கஞ்சி வழங்கி வருகின்ற நிலையில் நேற்று ஏறக்குறைய 3,500 பேருக்கு நோன்பு கஞ்சி பரிமாறியதுடன்நோன்பு மாத உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டன.
பள்ளிவாசலின் தலைவர் இக்பால் தலைமையிலும் டத்தோ வீரா சாகுல் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

